முக்கிய அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை உடனே நியமித்த மைத்திரி!

பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு மூன்று பதில் தலைவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சட்டத்தரணி சரத் கொன்கஹகே, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like