முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைக்கூலியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் சில முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கான பாதுகாப்பு விலகப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முன்னாள் பிரதமருக்கு ரணிலுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் நீக்கப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி, கடந்த அரசாங்கத்தின் போது சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பை சுமந்திரன் பெற்றிருந்தார்.






