இராணுவத்தினரை பயன்படுத்த மாட்டோம் – நாமல்

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கான கால அவகாசம் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் எவ்விதத்திலும் பாதுகாப்பு பிரிவைப் பயன்படுத்தி ரணிலை ​அலரிமாளிகையில் இருந்து வெளியேற்றமாட்டோம். அவர் தற்போது முன்னாள் பிரதமர் என்பதால், அவர் அங்கிருந்து வெளியேற கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.