ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அலரிமாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டிய சந்தியில் இந்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.






