வவுனியா மடுகந்தை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்
இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018 அன்று முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா இலங்கை வங்கியின் ஊழியர் ஒருவரும் முச்சக்கர வண்டியின் உரிமையாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இலங்கை வங்கியின் காவலாளியாக பணியாற்றிய விஜிதரன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவரது நண்பர்களின் உதவியுடன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்கிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் தற்சமயம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது
உயிரிழந்த விஜிதரன் என்பவர் வவுனியா உக்கிளாங்குளத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது






