இலங்கை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது. எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான தகவலை நிதியமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நாளாந்தம் டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலை குறைப்பானது நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.