புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது…

புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது
புதிய அரசியலமைப்பு சீர்திருத்த உருவாக்கத்திற்கு அரச அதிகரிகள் மட்டத்தில் ஆதரவை பெற்றுக்கொள்வதை நோக்காக கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்ற அரசியலமைப்பு சட்டசபை செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது


இதன்கீழ் யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில அரசியலமைப்ப சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க தலமையிலான குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விளக்கங்களை அரச அதிகாரிகளுக்கு வழங்கினர்
யாழ் மாவட்டத்திலுள்ள சகல உயர் நிலை அரச உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like