அனுமதிப் பத்திரமின்றி ஆங்கில மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்த ஆயுர்வேத மருத்துவருக்கு சாவகச்சேரி நீதிமன்று 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
ஆங்கில மருந்துகள் கையாள்வதில் தகைமையற்றவர்கள் ஆங்கில மருந்துகளை நோயாளர்களுக்கு வழங்குவதற்கும் பரிந்துரை செய்வதற்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் சபையினர் தடை விதித்துள்ளனர். அவ்வாறான மருந்தகங்களை நடத்துவோர் அதிகார சபையில் பதிவு செய்து ஆங்கில மருந்துகள் கையாள்வதற்கு அனுமதி பெறவேண்டுமென்று அறிவித்திருந்தனர்.






