கொழும்பின் புறநகர் பகுதியில் பொலிஸாரை தாக்க முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து பொலிஸாரை தமது கடமைகளை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்திய பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் றாகமை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண், சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பொலிஸாரினால் அவரை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அந்த பெண் பேலியகொட போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.






