புதிய அரசாங்கத்துடன் ஐந்து பேர் இணைவு? வெளியாகியுள்ள புதிய தகவல்

புதிய அரசாங்கத்துடன் இன்றைய தினம் ஐந்து பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் இன்று மக்கள் மகிமை போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த போராட்டத்தின் பின்னர் ஐந்து பேர் புதிய அரசாங்கத்துடன் இணைவார்கள் என கூறியுள்ளார்.