மஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்… பாதுகாப்பு தீவிரம் (வீடியோ)

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து தமது பலத்தை நிரூபிப்பதில் ஒவ்வொரு தரப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று மஹிந்த – மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் கொழும்பில் மக்கள் கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“மக்கள் மகிமை” என்ற தொனிப்பொருளில் இவர்களது போராட்டம் நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு கொட்டும் மழையிலும் மஹிந்த அணி உறுப்பினர்களும், பொது மக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும், குறித்த போராட்டத்தால் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மைத்திரியும் மஹிந்தவும் கைகோர்த்துக் கொண்டு வர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like