ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் இணைவது உங்களது நீண்ட கால எதிர்பார்ப்பு என்பது எனக்கு தெரிகிறது என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மகிந்த – மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையிலான “மக்கள் மகிமை” என்ற கூட்டமொன்று நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கொட்டும் மழையிலும் நீங்கள் வந்து இந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இணைவது உங்களது நீண்ட கால எதிர்பார்ப்பு என்பது எனக்கு தெரிகிறது.
அத்துடன், தற்போது தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாயம் 1000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு ஆதரவு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.






