விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி அரச வங்கியில் பாரிய கொள்ளை! வெளிவந்த தகவல்

அன்று ஒக்டோபர் 26ஆம் திகதி ஆகும். இது அன்றைய நாளில் இலங்கையில் நடந்த ஒரு அரசியல் புரட்சியை பற்றியது அல்ல.

மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

கொள்ளை இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களின் பிரதான சந்தேக நரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

”சேர் மத்தேகொட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது….” என மத்தேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் காமினி திலகசிறியிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்றனர். மத்தேகொட அரச வங்கி அமைந்திருந்தது மத்தேகொட வீட்டுத்தொகுதிக்கு அருகிலாகும்.

பொலிஸ் அதிகாரிகள் வங்கிக்குச் சென்றபோது, வங்கியில் பத்திரமாகப் பயன்படுத்தப்பட்டு இருந்த பணத்தில் பாதி மற்றும் தங்க நகைகளும் கொள்ளையர்களால் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.

வங்கியில் மூன்று பாதுகாப்பு பெட்டிகள் இருந்துள்ளன. எனினும் கொள்ளையர்கள் ஒரு பாதுகாப்புபெட்டியில் இருந்த பணம் மற்றும் தங்கம் நகைளைக் கொள்ளையடித்துள்ளனர்.

பத்துக் கோடிக்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பணம் 6 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் ஏழு கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பெறுமதி 4 கோடி ருபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் குழுவிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை ஏற்பாடு செய்த நபரின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

அதன்பின்னர் விசாரணைகளின் மூலம் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்த பொலிஸார், காரை ஏற்பாடு செய்ய தொடர்பு கொண்ட சிம் கார்ட் உரிமையாளர் தொடர்பான விபரங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டனர்.

குறித்த நபர் ஹபரகட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மத்தேகொட பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸ் குழு ஹபரகட பிரதேசத்திற்கு உடனடியாகச் சென்று சிம் கார்ட் உரிமையாளரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை செய்தபோது, “எனக்கு எதுவும் தெரியாது.. இந்த கொள்ளைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என பொலிஸாரின் குறித்த நபர் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரித்த பொலிஸாரிடம் குறித்த நபர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனது அடையாள அட்டை என்னிடம் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் டயர் முதலாளியிடம் டயர் வாங்கினேன். அவரிடம் முழுப்பணமும் செலுத்த முடியாது போனது.

இந்த நிலையில் எனது அடையாள அட்டையினை அவரிடம் கொடுத்து மிகுதிப்பணத்தை பின்னர் தருகிறேன் என கூறினேன். அவ்வளவு தான் எனக்கு தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.

மீகொட பிரதேசத்தில் அமைந்துள்ள டயர் கடைக்குச் பொலிஸ் குழுவினர் சென்றபோது குறித்த டயர் கடை மூடப்பட்டு இருந்துள்ளது.

அருகிலுள்ள கடைகளில் விசாரித்து கடை முதலாளியின் வீட்டு விலாசத்தை பொலிஸார் கண்டு பிடித்தனர்.

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற அன்றைய நாள் இரவில், மத்தேகொட பொலிஸ் சிறப்புக் குழு டயர் முதலாளியை கைது செய்தனர்.

டிலான் நலிந்த சந்தருவன் என்ற குறித்த சந்தேக நபர் தன்மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிம் கார்ட் உரிமையாளரை தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் மத்தேகொட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள 400 சிசிடிவி கமராக்களின் கணொளிகளைப் பெற்று பொலிஸார் பல தகவல்ளை பெற்றிருந்தனர்.

கொள்ளையர்கள் சென்ற கார் வாகனத்தின் எண் தகடு சி.சி.டிவி கமராக்களில் தெளிவாகக் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குற்றத்தை மறைக்க முயன்றும் முடியாத நிலையில் அனைத்தையும் ஒப்புக்கொண்ட டயர் முதலாளியான குறித்த சந்தேக நபர்.

34 வயதாக குறித்த டயர் முதலாளி இரண்டு பிள்ளைகளின் தந்தை. அவரது முதல் கிராமம் பாதுக்க, வேரகல. இப்போது அவர் கஹதுடுவ-தேகொட்டுவ பிதேசத்தில் வசிக்கின்றார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் மீகொட பகுதியில் ஒரு டயர் கடையை ஆரம்பித்துள்ளார். செல்வந்தராக திகழ்ந்த டயர் முதலாளியான டிலான் சில மாதங்களுக்கு முன் எல்லாப்பக்கமும் கடனால் சூழப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் யோசனை செய்த டிலான் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அவர் கொள்ளையடிக்க மத்தேகொட வங்கியை தெரிவு செய்தார்.

ஏனெனில் அதில் நான்கு ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்துள்ளனர். 3 பேர் பெண்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டுமே ஆண்.

டிலான் தனது திட்டம் வெற்றிபெற்றால், ஒரு நாளில் இருந்து செல்வந்தராக ஆகிவிடலாம் என்று நினைத்தார். அவர் தனது திட்டத்தை செயல்படுத்த நம்பகரமான குழு தேவை என்று உணர்ந்தார்.

தனது டையில் இருந்த உதவியாளரை தெரிவு செய்தார். பொத்துவிலைச் சேர்ந்த 41 வயதான குறித்த நபர் தொழில் நிமித்தம் கொடகமவில் தங்கியிருந்துள்ளார்.

அவரை ஆயத்தமாக இருக்குமாறு கூறிய டிலான், தனது கடையில் இருந்த அடையாள அட்டை ஒன்று 6 மாதமாக இருப்தை உணர்ந்தார். அதனை பயன்படுத்த எண்ணினார்.

அதன் பின்னர் அதன் மூலம் சிம் கார்ட்டை வாங்க எண்ணினார். அதன்பின்னர் தனது மற்றமொரு நண்பனை இணைத்துக்கொண்டார் டிலான்.

தன்னிடமிருந்த அடையாள அட்டைக்கு சிம் கார்ட்டைப் பெற்றுக்கொண்ட டிலான், வாடகைக்கு கார் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

26ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் டிலான் தனது உதவியாளர் மற்றும் நண்பருடன் வங்கிக்குச் சென்றுள்ளார்.

”மேடம் …. என்னிடம் சில தங்க நகைகள் உள்ளன. அவற்றை அடகு வைக்க வந்தேன் என டிலான் வங்கியில் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த ஊழியரான பெண், அடையாள அட்டையினை கேட்டபோது நாற்காலியின் அருகே இருந்த பையில் யையை விட்ட டிலான் அடையாள அட்டைக்குப் பதிலான துப்பாக்கியைக் காட்டி உள்ளார். அது விளையாட்டுத்துப்பாக்கி.

துப்பாக்கியை காட்டி வங்கியிலிருந்த பெண்களை மிரட்டி பாதுகாப்பு பெட்டியில் இருந்த பணம் மற்றும் நகைளை கொள்ளையிட்டுள்ளார் டயர் முதலாளியான டிலான்.

பொலிஸாரின் விசாரணைகளில் அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் டயர் முதலாளியான டிலான்.

கடைசியாக, மேடகோடாவில் ஒரு வங்கியை கொள்ளையடிப்பதற்காக டிலான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரிடம் அவர் ஒப்புக்கொண்டார்.