இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்து போதிலும் இன்னும் பதற்ற நிலை குறையவில்லை.
மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு நாளாந்தம் புதிய அமைச்சர்கள் இன்று வரை நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நானே உத்தியோகபூர்வ பிரதமர் என அலரி மாளிகையில் முகாமிட்டுள்ளார்.
அரசாங்க தரப்பினால் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் உட்பட குழுவினர் அலரி மாளிகையை விட்டு வெளியேறாமல் அங்கு உள்ளனர்.
அலரி மாளிகைக்கு வெளியே பிக்குகள் இன்னமும் பிரித் கூறி வருகின்றனர்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் , உறுப்பினர்கள் தினமும் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
பல ஊடகவியலாளர்கள் அலரி மாளிகைக்குள் என்ன நடக்கின்றது என்பதை வெளியே காட்டுவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அங்கு வருபவர்கள் சோதனையிட்ட பின்னரே அலரி மாளிகைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
தற்போது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதற்கு அலரி மாளிகையில் தனியாக அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளன. அதனை தாண்டி வெளியே செல்வதற்கு ஒருவரையும் அனுமதிப்பதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






