சபாநாயகருக்கு 10 வருட சிறைத்தண்டனை?

தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது.

ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்று கொண்டு ஓரிரு நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டினை மாற்றமையே இந்த முறைப்பாட்டிற்கு காரணமாக கூறப்படுகின்றது.

சபாநாயகர் அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்டுவதாகவும் பெரும்பான்மை மக்களின் விருப்பதிற்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் சபாநாயகர் செயற்பட்டுள்ளார் எனவும் முறைப்பாடு செய்த பேராசரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

1994, 20ஆம் இலக்க இலஞ்ச வட்டத்தின் 70வது பிரவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பக்கசார்பாக சபாநாயகர் செயற்படுவதற்கு குறைந்தபட்சம் 10 வருட சிறைத்தண்டனை கிடைக்க வேண்டிய குற்றச்சாட்டு என பல்கலைக்கழக சட்ட பிரிவின் பிரதானி குறிப்பிட்டள்ளார்.