உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமாரக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

இதனால் கொழும்பு அரசியல் பெரும் குழப்பமடைந்தது. பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரி வந்த நிலையில், நாடாளுமன்றமும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றை கூட்ட தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அந்த வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.