சர்வதேசம் இன்று கூட்டமைப்பின் பக்கம்! சம்பந்தன் – மகிந்தவிற்கு சவால்

முன்னாள் ஜனாதிபதியாக மகிந்த இருந்த காலத்தில் ஒன்றும் நடைபெறவில்லை என்றும் சர்வதேச ரீதியாக கூட்டமைக்கு உள்ள ஆதரவு இன்று வேறு எந்த ஒரு கட்சிக்கும் இல்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

பெருபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகள் தங்களின் கட்சியை பிரதிநிதிப்படுத்துவதற்காக அரசியல் தீர்வு விடயத்தில் செயற்படுவது கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

30 வருடகால யுத்தத்தின் காரணமாக நாடு பின்னோக்கி சென்றுள்ளது. எல்லா நாடுகளும் முன்னோக்கி செல்லும் போது இலங்கை தீவு மாத்திரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்வது நாட்டுக்கு நல்ல விடயம் அல்ல என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்று இலங்கை தீவு கடனை கட்ட முடியாது தத்தளித்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையும், ஒருமித்த செயற்பாடுமே கூட்டமைப்பின் பலமாக அமைந்துள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.