இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மோசமான சாதனையை பதிவு செய்த மஹிந்த!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மஹிந்த ராஜபக்ச மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி. பிரதமராக நியமித்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவில்லாத மஹிந்தவை பிரதமராக்கியது ஜனநாயக விரோதம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும், தம்மிடம் 113 உறுப்பினர்களின் ஆதரவிருப்பதாக மைத்திரி கூறி வந்தார்.

எனினும், மைத்திரி- மஹிந்த தரப்பு எதிர்பார்த்ததை போல 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. பெருந்தொகைக்கு குதிரை பேர முயற்சிகள் நடந்தபோதும், அவை வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மைத்திரி- மஹிந்த தனியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், 19வது திருத்தத்திற்கு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதன்மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவில்லாமல் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும் இந்த பதவிக்காலத்தில் ஒருநாள் கூட நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலைமையேற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் செல்லாத பிரதமர் என்ற வரலாற்று புகழ் மஹிந்த ராஜபக்சவிற்கு கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறாத பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தார்.

பிரதமர் மட்டுமல்ல, புதிய அமைச்சர்களும் இந்த புதிய சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.