மகிந்த – மைத்திரிக்கா? ரணிலுக்கா? உச்ச நீதிமன்றத்தில் பேரிடி!!

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறான என்ற வகையிலேயே தீர்ப்பு வருவதற்கான சாத்தியம் உள்ளது என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. இந்த வழக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும், இது அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டி மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ப்பட்டுள்ள இந்த வழக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம் என கூறப்படுகிறது.

எனினும் இன்னுமொரு தரப்பினர், இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா கூறியது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு சரியானது என தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த வழக்க இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய வழக்கு என்பதால் இறுதி தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் உன்னிப்பான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே இந்த வழக்கிற்கான தீர்ப்பு மக்களுக்கு சார்பாக இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நீதிமன்ற உள்ள மூத்த நீதிபதிகள் தெரிவிக்கின்றனர்.

இத் தீர்ப்பு இலங்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட பல மடங்கு சர்வதேசத்திற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப் படுகிறது.

உலக சனநாயகத்தின் திறவுகோல் இலங்கை நீதித்துறையிடம் இன்றை நாளில் உள்ளதாக கூறப்படுகிறது.

இத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு சாதகமாக வந்தால் இலங்கையில் ஒரு சாராருக்கு மகிழ்ச்சி ஒரு சாராருக்கு ஏமாற்றம் சர்வதேசத்திற்கு பேரதிர்ச்சி என்பதுடன் எதிர்கால இலங்கைக்கும் ஆபத்தாக மாறலாம் என்பது இன்றைய சர்வதேச இராஜதந்திரிகளின் செய்தியாகவும் உள்ளது.

சனநாயகத்திற்கு சார்பாக வந்தால் ஒட்டு மொத்த சர்வதேசத்திற்கும் பெரு மகிழ்ச்சி…