கடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞன் பலி..

கடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞன் பலி..

கொழும்பில் இருந்து புறப்பட்ட கடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் ஹதமுன பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், உயிரிழந்த இளைஞர் பொலன்னறுவை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் மேலதிக விசரணைகளில் தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like