கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த விமானத்தில் நாட்டை வந்தடைந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 7 கிலோகிராம் 20 கிராம் எடையுடைய தங்காபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர், சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.