மிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள அவசர அறிக்கை

நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகளோ அல்லது அரச அதிகாரிகளோ பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இன்று இதனை அறிவித்துள்ளார்.

ரணவீர பொலிஸ் அலுவலர் ஒருவரை தாக்குவதும், அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசுவதுமான காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது.

இந்த நிலையில் தம்மைப்பொறுத்தவரை பொலிஸாரை போன்று வந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்கள் என்று எண்ணத்தோன்றியதாக ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

எனவே தாம் தாக்கியவர் உண்மையான பொலிஸ்காரராக இருந்தால் அதற்கு மன்னிப்புக்கோருவதாக பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like