வவுனியாவில் மக்களின் உயிரை பறிக்கிறதா வீதி அபிவிருத்தி திணைக்களம்?

வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளாகின்றனர்

இது பற்று மேலும் அறியவருவதாவது

வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியானது வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு(RDD) சொந்தமானது குறித்த வீதியின் அருகாமையில் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையினால் வீதியின் இரு மருங்கிலும் வீதியை அகழ்ந்து அதனுள் குழாய்கள் புதைக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் அகழ்ந்த வீதியினை மீண்டும் சரியான முறையில் செப்பனிடப்படாத நிலையில் காணப்படுகின்றது வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சரியான முறையில் செப்பனிடப்படாத குறித்த வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவதுடன் வாகனங்கள் சேற்றில் புதைந்து வேககட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன

இது தொடர்பாக வீதி அபிவிருத்தி திணைக்களம் அறியப்படுத்தியும் இதுவரியிலும்ம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த நடவடிக்கைக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும் என மக்கள் வேண்டிக்கொள்வதுடன் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் யாராவது ஓர் அரசியல்வாதி இப்பிரச்சினையை தெரிவித்து பொதுமக்களின் பாதுகாப்பான பயபத்தை உறுதிப்படுத்தி தருமாறும் இவ்வீதியால் பயணிக்கும் பயணிகள் தெரிவிக்கின்றனர்