இலங்கைக்கு சர்வதேச தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.
ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த உதவியை நிறுத்தியுள்ளது. அரசியல்வாதிகளின் செயற்பாடு காரணமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான்.
அதிகார ஆசையுடையவர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அரசியல்வாதிகளாக செயற்படுகின்றனர்.
எங்கள் ஆட்சியின் போது வெளிநாட்டு வருமானம் பாரியளவு அதிகரித்தது. ஏற்றுமதி பாரியளவில் அதிகரித்து காணப்பட்டது. எனினும் தற்போது சர்வதேச தடை விதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.






