புலம்பெயர் தமிழர்களினால் கருணாவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாக புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் குழு ஒன்று அறிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராட்டம் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தை கருணா பயன்படுத்தி வந்தமை காரணமாக அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாக அந்த குழு எச்சரித்துள்ளது.

ஈழ சைபர் குழு என்ற அமைப்பினாலேயே கருணாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் அரசியல் தொடர்பாக கருணா வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. விடுதலைப் புலிகள் சார்ந்த சில விடயங்களையும் கருணா தனது அரசியலுக்காக வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.