தேசிய தலைவரின் வீட்டை சுத்தம் செய்த 4 இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!

வல்வெட்டித்துறையில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தலைவர் பிரபாகரனின் வீட்டின் முன் காணப்பட்ட பற்றைகளைச் சுத்தம் செய்த 4 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இன்று தேசிய தலைவர் பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்துக்கு முன்பாக உள்ள பற்றைகளை வெட்டி துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நான்கு இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்திற்கு மக்கள் வந்து செல்வதை விரும்பாத அரசாங்கம் அவரது இல்லத்தினை சில வருடங்களுக்கு முன்னர் தகர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.