நாளைய தினம் தனி­யார் பேருந்­து போக்­கு­வ­ரத்துக்கள் யாவும் நிறுத்தம்…

நாளைய தினம் தனி­யார் பேருந்­து போக்­கு­வ­ரத்துக்கள் யாவும் நிறுத்தம்…

மக்­க­ளின் கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் முக­மாக, நாளை வியா­ழக்­கி­ழமை தனி­யார் பேருந்­துச் சேவை­கள் இடம்­பெ­றாது என்று, வடக்கு மாகாண தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­க­ளின் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு – கிழக்­கில் நாளை வியா­ழக் கிழமை கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­குப் பல்­வேறு தரப்­புக்­க­ளும் ஆத­ரவு வழங்­கி­யுள்­ள­னர். இந்த நிலை­யில் வடக்கு மாகாண தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கம் தாமும் ஆத­ரவு வழங்­கு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பில் அதன் தலை­வர் சிவ­ப­ரன் தெரி­வித்­த­தா­வது,

காணா­மற் போனோ­ரின் உற­வி­னர்­க­ளின் போராட்­டத்­துக்கு நாம் ஆத­ரவு வழங்­கு­கின்­றோம். அவர்­கள் வடக்­கு-­கி­ழக்கு முழு­வ­தி­லும் கடை­ய­டைப்­புக்கு கோரிக்கை விடுத்­துள்­ள­னர். இதற்கு ஆத­ரவு வழங்­கும் வகை­யில் நாளை வியா­ழக் கிழமை வடக்கு மாகா­ணத்­தில் தனி­யார் பேருந்­துச் சேவை நடை­பெ­றாது – என்­றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like