இலங்கை விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம்

இலங்கை விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம்

இலங்கை விமான சேவைக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், மேற்கொள்ளப்படும் விமான வெள்ளோட்டம் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியாவில் நாளைய தினம் விமானம் வெள்ளோட்டம் இடம்பெறவுள்ள நிலையில், நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் பயணிகள், பயண முகவரையோ அல்லது அருகிலுள்ள இலங்கை விமான நிலைய அலுவகத்தையோ தொடர்புகொள்ளமுடியும்.
அத்துடன், ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு இலக்கமான 0094197331979 என்ற எண்ணுக்கு அல்லது www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like