கொழும்பை சேர்ந்த தம்பதி தொடர்பில் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் அவசரமாக தகவல் கோரப்பட்டுள்ளது.
இந்திய பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் தற்சமயம் இருந்து வருகின்ற 29 வயதான ஜோய் என்பவரின் பெற்றோர் குறித்த தகவல்களே கோரப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள தனது பெற்றோரை தேட இலங்கைக்கு செல்வதற்கான அனுமதியை பெற்று தருமாறு ஜோய் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரியுள்ளார்.
இதனடிப்படையிலேயே இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம், குறித்த தம்பதி தொடர்பான தகவல்களை கோரியுள்ளது.
ஜோய்க்கு ஐந்து வயதாக இருக்கும் போது உறவினரொருவரால் இந்தியாவிற்கு கூட்டி செல்லப்பட்டுள்ளதுடன், இதன்போது அவரது பெற்றோர் கொழும்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றுக்கு முன்பாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் ஜோயின் தந்தை மீனவரான பில்லு எனவும், தாயின் பெயர் மன்கோ எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தகவல் தெரிந்தவர்கள் 0112 2451397, 0112 2432457 போன்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






