பிரபாகரன் அவர்களே…!!! மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ

மாவீரர் நாளான இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது சத்தியம் செய்துள்ளார்.

கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் தமிழர் பகுதிகளிலும், தமிழ் நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு கடலில் இறங்கி சத்தியம் செய்துள்ளார்.

“பிரபாகரன் அவர்களே உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு எத்தனையோ மாவீரர்கள் தனது உயிரை கொடுத்தனர். என் தலைவன் பிரபாகரன் தனி தமிழீழத்தை காக்க ஆயுதம் ஏந்தி போராடினார்.

நான் என்ன செய்யப்போகின்றேன் என்றால், பொது வாக்கெடுப்பு என்று முதன் முதலில் கூறினேன். அந்த பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்வேன்.

தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவத்தை வெளியேற்றி விட்டு பொது வாக்கெடுப்பு நடக்கும், சுதந்திர தமிழீழம் அமையும், அப்போது மீண்டும் வந்து இந்த கடலில் சத்தியம் செய்வேன்” என கூறியிருந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like