மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக தாம் ஆட்சிக்கு வரவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவற்றின் பிரகாரமே செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.
மக்களின் விரும்பம் இன்றி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அபகரிக்க முடியாது. மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக தாம் ஆட்சிக்கு வரவில்லை.
எவ்வாறாயினும், மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கே ஜனாதிபதியுடன் இணைந்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.






