சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிடைத்த பாராட்டு!

சுவிஸ் செங்காளன் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மாணவி ஒருவர் சர்வதேச நிபுணத்துவ ஆசிரியர்கள் பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பான விரிவான ஆய்வொன்றை நடத்தி இந்த பாராட்டுக்களை அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரணி ஜெயக்குமார் என்னும் மாணவியே இந்த ஆய்வினை நடத்தியுள்ளார்.

இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பாக விரிவான கள ஆய்வை மேற்கொண்டு அது தொடர்பான பூரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த ஆய்வறிக்கையை பாராட்டிய நிபுணத்துவ ஆசிரியர் குழாம், அது தொடர்பாக பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அத்தோடு இதுபற்றி அறிந்த பிராந்திய பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு இந்த ஆய்வுபற்றிய பொதுமக்கள், மற்றும் நலன் விரும்பிகளுக்கான சமர்ப்பணம் எதிர்வரும் 5ஆம் திகதி செங்காளன் மானிலத்தில் குறித்த மாணவியால் பாடசாலையின் அனுசரணையோடு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வின் நுழைவுக்கட்டணம் மூலம் கிடைக்கும் நிதி, இலங்கையில் உள்ள 300 பள்ளிச்சிறார்களுக்கு ஆரோக்கியமான நீரைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த மாணவியின் முயற்சி உதவிநலத்திட்ட ஆய்வு அடிப்படையில் பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles