இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்தோர் முயற்சி!

கடந்த காலங்களில் இலங்கையில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர்ந்துள்ள டயஸ்போரா முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த அணி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த காலங்களில் இலங்கை தழும்பல் நிலையை ஏற்படுத்தவும், வடக்கு கிழக்கின் பதுகாப்பைச் சிதைக்கவும், அங்கிருந்து இராணுவத்தினரை வெளியேற்றவும் புலம்பெயர்ந்துள்ள டயஸ்போரா பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சமஷ்டியை வழங்கும் அரசியலமைப்பினை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பெற்றுக் கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றமை, தெளிவாக தெரிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியதன் மூலம் அது பட்டவர்த்தனமாகியுள்ளது. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என அறிவித்துள்ளனர். அவர்கள் நேரம் பார்த்து பாய்ந்துள்ளனர்.

அதற்கமைய, யுத்த குற்றம் செய்த யுத்தத்த வெற்றி கொண்ட இராணுவத்தினர் தண்டனைக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் முளைவிட ஆரம்பித்துள்ளன. அதுமாத்திரமன்றி பாதுகாப்பு பிரிவின் அப்பாவி அதிகாரிகள் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசமைக்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வாய்ப்பு கேட்கிறது“ என தெரிவித்துள்ளார்.