விக்கியின் செல்வாக்கு; தமிழரசு கட்சியின் கேவலமான செயல்!

வட மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரம் வீசப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அவர் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன.

சுயபுத்தியின்றி சொல்புத்தி கேட்டு 4/5 பெருபான்மையுடன் அமைத்த மாகாணசபையை நாசமாக்கிய 23ம் புலிகேசியே வருக வருக.

தமிழர் தேசத்தில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தினை சிங்கள தேசத்தில் அமைக்க காணிவழங்கிய வள்ளலே வருக வருக.

பழைய பேரூந்து நிலையத்தினை மூடி அப்பாவி மக்களினதும் நகர வர்த்தகர்களினதும் மடியில் கைவைத்த பெருந்தகையே வருக வருக.

போன்ற பல்வேறு வசனங்களுடன் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என துண்டுப்பிரசுரத்தின் கீழே காணப்படுகின்றது.

குறித்த துண்டுப்பிரசுரங்களை முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழ் கட்சி ஒன்று வீதிகளில் வீசியுள்ளதாக வன்னி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.