பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை சட்ட விரோதமானது என தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 122 எம்.பி கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வேளையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது






