நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகி செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தித்துள்ளது.
அத்துடன், பிரதமர் பதவியை வகித்தவர் உட்பட அமைச்சரவையின் 49 உறுப்பினர்களையும் எதிர்வரும் 12ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையிலேயே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகி செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.






