பொலிஸார் கொடூரமாக கொலை! கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் போராளி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

40 வயதான கண்ணன் என்கிற கதிரமதம்பி ராஜகுமாரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் கொடூரமாக வெட்டியும், சுட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 35 மற்றும் 29 வயதுடைய பொலிஸாரே கொலை செய்யப்பட்டிருந்தனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜயந்தன் படைப்பிரிவை சேர்ந்த அஜந்தன் மற்றும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவை சேர்ந்த ராசநாயகம் சர்வானந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அஜந்தன் மட்டக்களப்பில் வைத்தும் சர்வானந்தன் கிளிநொச்சியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like