இறுதி நேரத்தில் ரணிலைக் கைவிட்ட ஜே.வி.பி…….!! பலிக்குமா பிரதமர் கனவு….?

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவிக்குமாறு கோரி எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த யோசனைக்கு ஆதரவு வழங்கப்படாதென மக்கள் விடுதலை முன்னணி கட்சி தெரிவித்துள்ளது

இந்தத் தகவலை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி யோசனை கொண்டு வருவது அவர்களின் வேலை. எனவே மஹிந்த ராஜபக்ச அல்லது ரணில் விக்ரமசிங்கவுக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை என தெளிவாக கூறிவிட்டோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்போம். இலங்கையில் அரசியல் சூழ்ச்சி ஒன்றே இடம்பெற்றது.ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கே முன்வந்தோம். ஒரு வேளை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஒன்று செயற்பட்ட நிலையில் அந்த அரசாங்கம் சூழ்ச்சியான முறையில் பறிக்கப்பட்டால், அதற்கு எதிராகவும் குரல் கொடுப்போம். அதற்காக அவர்களுடன் இணைந்து ஆதரவு வழங்குவது எங்கள் கட்சியின் திட்டமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.