உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தீர்ப்புக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.

இதன்படி, நாடாளுமன்றக் கலைப்பு பிழையென சிலவேளை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால், ஐக்கிய தேசியக் கட்சியினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரும் ரணிலை பிரதமராக்க ஜனாதிபதி மறுத்தால், அந்த தீர்ப்பை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஐ.தே.க முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் நாடாளுமன்றை கலைப்பு சரியென நீதிமன்றம் சொல்லுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம். பிக்கள் சிலர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கான முடிவை எடுப்பார்கள் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.