இலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி

மஸ்கெலியா – நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷபான தோட்டம், முள்ளுகாமம் மேற்பிரிவு பிரதேச காட்டு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று காலை வரை தீ பரவிய வண்ணமே காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தீ அனர்த்தம் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் வரையான காட்டு பகுதியிலுள்ள தாவரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் விமானப்படையினரின் உதவி பெறப்பட்டு உலங்குவானூர்தியின் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விஷமிகளின் செயற்பாடு தான் தீ அனர்த்தம் ஏற்பட காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles