ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை – சம்பந்தன்

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது.

ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்

அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles