ரணில் இல்லை… பிரதமராகின்றார் கரு ஜயசூரிய?

சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்க இல்லாத ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாக அரச தரப்பிலிருந்து அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை இனி ஒருபோது பிரதமராக நியமிக்க போவதில்லை என கூறியிருந்தார்.

அத்துடன், ரணில் இல்லாது வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைத்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமராக ரணில் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.