பதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி! சர்ச்சைக்குரியவர்களின் நிலை பரிதாபம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியினருடன் விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.

அதன் பின்னர், அமைச்சர்கள் நியமனத்தில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்மாருக்கு ரணில் விக்ரமசிங்க முன்னுரிமை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரியவர்களுக்கு அமைச்சு பதவிகள் இல்லை என்பதுடன் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்து அங்கீகாரத்திற்காக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமந்தப்பட்டவர்கள் மீது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எவ்வாறாயினும் கட்சி தாவியவர்களுக்கு ரணில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி இல்லை என்னும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.