உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன தொலைத்தொடர்பு கம்பங்கள்!!!

உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன தொலைத்தொடர்பு கம்பங்கள்!!!

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்துள்ளன.
இன்று பிற்பகல் 5.30 மணியளவில்பலாலி வீதியின் ஊடக சென்ற கெண்ரெய்னர் வாகனம் ஒன்றில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சிக்குண்டதாலேயே மூன்று தொலைத்தொடர்பு கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து விழுந்துள்ளன. ஆயினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இவ் பலாலி வீதியில் அதிகளவான வாகனங்கள் செல்வதாலும் இவ் வீதி பிரதான வீதியாக காணப்படுவதாலும் உடனடியாக முறிந்த கம்பங்களை அப்புறப்படுத்தக்கோரியும், எனிவரும் காலங்களில் தொலைத்தொடர்பு கம்பங்களை உயரமாக அமைக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொ‌ண்டனர்.
மேலும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வராதமையால் உரும்பிராய் இளைஞர்களால் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like