அந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் தொடர்­வாரா? இல்­லையா? என்ற கேள்வி அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் எழுந்­துள்­ளது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லில் எந்­த­வொரு தரப்­பும் பெரும்­பான்­மை­யைப் பெற்­றுக் கொள்­ள­வில்லை. ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யும், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யும் இணைந்து கூட்டு அரசை அமைத்­தன.

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்பட்­டார்.

கடந்த ஒக்­ரோபர் மாதம் 26ஆம் திகதி கூட்டு அர­சி­லி­ருந்து ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி வில­கி­யது. மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார். அவ­ரால் பெரும்­பான்மை நிரூ­பிக்க முடி­யா­மல், பெரும் அர­சி­யல் குழப்­பங்­கள் ஏற்­பட்டு தற்­போது அது முடி­வுக்கு வந்­துள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமை அமைச்­ச­ராக இன்று பத­வி­யேற்­க­வுள்­ளார். ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர், ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சில் இணை­வ­தற்­குப் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லர் அகில விராஜ் தெரி­வித்­தார்.

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சில் இணைந்­தா­லும் அவர்­க­ளுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கக் கூடாது என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சித் தலை­மைக்கு அழுத்­தம் கொடுத்­துள்­ள­னர்.

அதற்கு அமை­வாக ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­கள், ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சில் இணைத்­துக் கொள்­ளப்­ப­டா­விட்­டால், சம்­பந்­த­னின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்கே செல்­லும்.

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சில் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், இணைத்­துக் கொள்­ளப்­பட்­டால், சம்­பந்­தன் தொடர்ந்­தும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் தொட­ரு­வார் என்று கொழும்பு அர­சி­யல் வட்டா­ரங்­கள் சுட்­டிக்­காட்­டின.