கல்லடி பாலத்தில் நபரால் பரபரப்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றில் குதித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடிப் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் 9.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவரே கல்லடிப் பாலத்தில் இருந்து ஆற்றிற்குள் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த நபர் வந்ததாக தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும் அவரது பாதணியும் பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலத்தில் இருந்து பாய்ந்ததாக தெரிவிக்கப்படும் நபரைத் தேடும் பணிகளில் கடற்படையினரும் அப்பிரதேச மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.