திடீரென ஊரிற்குள் புகுந்த கடல் நீர்…..

முல்லைத்தீவு, செல்வபுரம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவில் நேற்றையதினம் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பின் காரணமாக பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளது.

இதனால், கரையோரப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.குறித்த கிராமத்து வீதிகள் மற்றும் வடிகான்கள் புனரமைப்பு செய்யப்படாத காரணத்தினாலேயே மக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செல்வபுரம் கிராமத்தை நேரில் வந்து பார்வையிட்டு வீதிகளையும் வடிகான்களையும் புனரமைப்பு செய்து தரவேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles