முல்லைத்தீவில் சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுங்கேணி, தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்று வட்ட வீதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த போது எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியிருந்தார்.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும் மோட்டார்சைக்கிளை செலுத்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று, இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதிய நாகராசா மதுசன் (வயது 16) என்ற மாணவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.