மட்டக்களப்பில் மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பில் நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு இறுதிக்கிரியைகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.