தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகளினால் பரபரப்பு….!!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளதென குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.வல்லை முனீஸ்வரன் கோயிலை அண்மித்த பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (புதன்கிழமை) மாலை ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளன.குறித்த சுவரொட்டியில் ‘தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது, ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினதும், பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.

ஆயுத போராட்டமானது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்திற்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles